ஸ்ரீமதி மணிமேகலை அவர்கள் கடந்த 5 வருடங்களாக CRAYONS PLAY SCHOOL என்ற பெயரில் பள்ளி நடத்திவருகிறார். பரதநாட்டியம் “ப்ரியா கலாசேஷத்ரம்” என்ற பெயரில் கலாசேஷத்ரா பாணியில் நடனத்தை தன் மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார்.
இப்பள்ளிக்கு சிதம்பரம் பல்கலைக் கழகத்தினரால் “நாட்டிய கலா சேவா மந்திர்” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சென்னையில் தனது நடனப்பள்ளியை சிறப்புற நடத்தி வருகிறார் தமது மாணவர்களை அரசு நாட்டியத் தேர்வு மற்றும் பன்னாட்டு நாட்டிய தேர்வுகளுக்கு தரம் உயர்த்தி வருகிறார். இவரின் கலைச் சேவையைப் பாராட்டி சிதம்பரம் நடராஜர் கோயில் “பரதகலா சூடாமணி” என்ற பட்டத்தனை வழங்கியுள்ளது. மேலும் திருமதி வைஜெந்தி மாலா, திருமதி சொர்ணமாலாயா, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கலெட்டர் கைகளால் விருதுகளை பெற்றுள்ளார்.